ஆனந்த பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்ல
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார்
1 மேலோக நாடெந்தன் சொந்தமிதே - இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் - நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்
2 நம்பிக்கை அற்றோனாய் அலைந்த என்னை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே - இந்த
பாரினில் வெற்றி என்னை சிறக்கச் செய்தார்
3 அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
பொற்புரன் சேவையின் பாக்யமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே
4 பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்
5 அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர்- தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன் - அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்
6 ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம்
Add to Set
Login required
You must login to save songs to your account. Would you like to login now?