Aanantha Thuthi Oli Ketkum
Anandha Thuthi Oli Ketkum
Adal Padal Sathamum Thonikkum
Agaya Vinmeenai Avar Janam Perugum
Andavar Vakku Palikkum
1 Magimaipaduthu venendrarey
Magibanin Pasam Perithey
Mangatha Pugaludan Valvom
Matchi Petruyarnthiduvom
Kurugida Mattom Kundrida Mattom
Karaiyilla Devanin Vakku :- Ah.. Ah..
2 Aathi Nilai Yeguvomey
Aseer Thiruba Peruvom
Palana Manmeydugal Yavum
Paralum Veyenthan Manaiyagum
Sirai Valvu Mariyum Seer Valvu Malarum
Seeyonin Magimai Thirumbum :- Ah.. Ah..
3 Viduthalai Mulangiduvomey
Vikkinam Yavum Agalum
Idukangal Soolnthidum Veylai
Retchagan Meitparulvarey
Nugangal Murinthidum Kattukal Arunthidum
Viduthalai Peruvila Kanbom :- Ah.. Ah..
4 Yacoubu Nadungiduvanoo
Yacoubin Devan Thunaiyey
Americai Valvai Alaipom
Andavar Marbil Sugipom
Patharatha Valvum Sitharatha Manamum
Parisaga Devanarulvar :- Ah.. Ah..
5 Daveedin Mainthan Thalaiyavar
Thasarin Thalaigal Vanagum
Theydidum Thasarin Kanam
Devathi Devanin Thiyanam
Thalaivargal Eluvar Eliyorum Uyarvar
Paniyalar Thiranduelum Andu: - Ah.. Ah
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்
1 மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோம்
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு :- ஆ.. ஆ..
2 ஆதி நிலை ஏகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும:- ஆ.. ஆ..
3 விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம்:- ஆ.. ஆ..
4 யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வாh:- ஆ.. ஆ..
5 தாவீதின் மைந்தன் தலையாவார்
தாசரின் தலைகள் வணங்கும்
தேடிடும் தாசரின் கானம்
தேவாதி தேவனின் தியானம்
தலைவர்கள் எழுவார் எளியோரும் உயர்வார்
பணியாளர் திரண்டெழும் ஆண்டு:- ஆ.. ஆ..