Verse 1ஆ நீதியுள்ள கர்த்தரே
வெளி வறண்டதாலே
எச்சீவனும் வதங்குதே.
இத் துன்பம் எங்களாலே
நடந்த பாவத்தின் பலன்
என்றெங்களில் அவனவன்
துக்கித்துச் சொல்ல வேண்டும்.
Verse 2ஆ எங்கள் மீறுதல்களை
இரக்கமாய் மன்னியும்
நீரே அடியார் நம்பிக்கை.
சகாயத்தை அளியும்;
கர்த்தாவே சுத்த தயவால்
மழையைத் தந்து அதினால்
நிலத்தைப் பூரிப்பாக்கும்.
Verse 3தயாபரா நீர் உமது
உடன்படிக்கைக்காக
ரட்சித்து காய்ந்த பூமிக்குத்
தண்ணீர் இறைப்பீராக;
ஆகாயத்தின் கர்த்தரே நீரே
மழையை உம்மை அன்றியே
யார் பெய்யப் பண்ணக்கூடும்.
Verse 4மூச்சற்ற விக்ரகங்களால்
ஆகாதே; தேவரீரே
பாரத்தை உமது கையால்
விரித்தீர்; அதில் நீரே
அளவில்லாமல் ஆள்பவர்;
நீரே பிதா நீர் ரட்சகர்;
உம்மாலே யாவும் ஆகும்.
Verse 1aa needhiyulla karththarae
veli varandadhalae
yechchjeevanum vadhangudhae.
ith thunbam yengalaalae
nadandha paavaththin palan
yendrengalil avanavan
dhukkiththuch solla vaendum.
Verse 2aa yengal meerudhalgalai
irakkamaai manniyum
neerae adiyaar nambikkai.
sagaayaththai aliyum;
karththaavae shuththa dhayavaal
mazhaiyaith thandhu adhinaal
nilaththaip poorippaakkum.
Verse 3dhayaaparaa neer umadhu
udanbadikkaiக்காக
ratchiththu kaaindha bhoomikkuth
thanneer iraippeeraaga;
aagaayaththin karththarae neerae
mazhaiyai ummai andriye
yaar peyyap pannakkoodum.
Verse 4moochchatra vigragangalaal
aagaadhae; dhaevareerae
paaraththai umadhu kaiyaal
viriththeer; adhil neerae
alavillaamal aalbavar;
neerae pithaa neer ratchagar;
ummaalae yaavum aagum.
Download Song