Verse 1ஆ பிதா குமாரன் ஆவி
விண்மண் உலகை எல்லாம்
தாங்கும் சருவ வியாபி
உம்மால் ராப்பகலுமாம்
உம்மால் சூரியன் நிலா
ஓடுது தயாபரா.
Verse 2சாத்தான் தீவினை வீணாக
என்னைப் போன ராவிலே
தேவரீர் மா தயவாக
கேடும் தீதுமின்றியே
காத்ததால் என் மனது
தேவரீரைப் போற்றுது.
Verse 3ராப்போனாற்போல் பாவராவும்
போகப் பண்ணும் கர்த்தரே
அந்தகாரம் சாபம் யாவும்
நீங்க உம்மை இயேசுவே
அண்டிக்கொண்டு நோக்குவேன்
உம்மால் சீர் பொருந்துவேன்.
Verse 4வேதம் காண்பிக்கும் வழியில்
என்னை நீர் நடத்திடும்
இன்றைக்கும் ஒவ்வோரடியில்
என்னை ஆதரித்திடும்
எனக்கு நீர்மாத்திரம்
பத்திர அடைக்கலம்.
Verse 5தேகம் ஆவி என்னிலுள்ள
சிந்தை புத்தி யாவையும்
ஸ்வாமி உமதுண்மையுள்ள
கைக்கும் ஆதரிப்புக்கும்
ஒப்புவிப்பேன் என்னை நீர்
பிள்ளையாக நோக்குவீர்.
Verse 6வானதூதர்கள் அன்பாக
என்னைப் பேயின் கண்ணிக்கு
தப்புவிக்கவும் நேராக
கடைசியில் மோட்சத்து
வாழ்வில் கொண்டு போகவும்
தயவாகக் கற்பியும்.
Verse 7என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும்
ஆ திரியேக வஸ்துவே
என் மனுக்காமென்று சொல்லும்
வேண்டிக்கொள்ளச் சொன்னீரே
ஆமேன் உமக்கென்றைக்கும்
தோத்திரம் புகழ்ச்சியும்.