Verse 1ஆ சகோதரர் ஒன்றாய்
ஏகமான சிந்தையாய்
சஞ்சரித்தல் எத்தனை
நேர்த்தியான இனிமை.
Verse 2அது ஆரோன் சிரசில்
வார்த்துக் கீழ்வடிகையில்
கந்தம் வீசும் எண்ணெயே
போன்றதாயிருக்குமே.
Verse 3அது எர்மோன்மேலேயும்
சீயோன் மேடுகளிலும்
பெய்கிற ஆகாசத்து
நற்பனியைப் போன்றது.
Verse 4அங்கேதான் தயாபரர்
ஆசீர்வாதம் தருவார்
அங்கிப்போதும் என்றைக்கும்
வாழ்வுண்டாகிப் பெருகும்.
Verse 5மேய்ப்பரே நீர் கிருபை
செய்து சிதறுண்டதை
மந்தையாக்கி யாவையும்
சேர்த்தணைத்துக் கொள்ளவும்.
Verse 6எங்கள் நெஞ்சில் சகல
நற்குணங்களும் வர
தெய்வ அன்பை அதிலே
ஊற்றும் இயேசு கிறிஸ்துவே.
Verse 7நீரே நெஞ்சை நெஞ்சுடன்
கட்டி நேசத்தின் பலன்
நன்மை தீமை நாளிலும்
காணக் கட்டளையிடும்
Verse 8மூன்றொன்றாகிய பிதா
மைந்தன் ஆவியும் எல்லா
நாளும் ஒருமைப்படும்
போல் இம்மந்தை ஒன்றவும்.