Verse 1ஆ வானம் பூமி யாவையும்
அமைத்து ஆளும் கர்த்தரே
உமது ஞானம் சத்தியம்
அளவில் அடங்காததே
Verse 2உமக்கு வானம் ஆசனம்
பூதலம் பாதப்படியாம்
எங்களுக்கு இருப்பிடம்
கிடைத்தது மா தயையாம்
Verse 3இவ்வீட்டில் நாங்கள் வசித்து
பக்தியோடும்மைப் போற்றுவோம்
இடைவிடாமல் துதித்து
கொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம்
Verse 4இங்கே இருக்கும் நாள் மட்டும்
உற்சாகத்தோடு உமக்கே
அடங்கி நாங்கள் நடக்கும்
குணத்தை தாரும் கர்த்தரே
Verse 5ஜீவன் பிரியும் நேரத்தில்
உம்மண்டை வந்து சேரவும்
முடிவில்லாத இன்பத்தில்
நற்பங்கடையவும் செய்யும்
Verse 6இகத்திலும் பரத்திலும்
செங்கோல் செலுத்தும் நாதரே
உமக்கு நித்திய காலமும்
துதி உண்டாவதாகவே