Aahaa enna inbam paralogam
Verse 1ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்
இன்ப இயேசு அளித்தனரே
அளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடா
அன்பைக்கூற நாவும் போதுமோ
Verse 2நீசதுரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ நீர்
பாவ உளையினிறே தூக்கி எடுத்தீரே நீர்
Verse 3நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற என்னை
பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர்
Verse 4நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம்
பரிந்து பேசி அன்பால் நிலையாய் நிறுத்தினீர்
Verse 5எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட போதிலும்
அன்பின் சவுக்கடியால் சேர்த்தன்பாய் ஆதரித்தீர்
Verse 6காரிருள் சூழும் வேளை கலங்கித் தவிக்கையில்
காத்து நீர் என்னைத் தேற்றி கருத்தாய் ஆதரித்தீர்
Verse 7பிராண நாதா உந்தனை என்று நான் கண்டிடுவேன்
ஆருயிர் நேசா உம்மை என்றும் காண ஆசை பொங்குதே
Verse 8ஆழைப்பின் சத்தம் கேட்க நாட்கள் அதிகமாமோ
நேசர் மார்பில் சாய்ந்திட வாஞ்சை பெருகிடுதே
Verse 9ஆகாய மேகந்தனில் சேர்த்திடும் நேரமிதில்
ஆனந்தம் ஆனந்தமே என்றென்றும் ஆனந்தமே
Verse 1aahaa enna inbam paraloka inbam
inba yesu aliththanare
alavir kadangaa buththikkum ettidaa
anbaikkoora naavum pothumo
Verse 2neesathuroki enthanai paasamaai etriiro neer
paava ulaiyinire thookki eduththeere neer
Verse 3naasapuri nokkiye virainthu sendra ennai
paasam vaithen unthanil endru koovi azhaiththeere neer
Verse 4nerintha naanal ennai muriththidum tharunam
parinthu pesi anbaal nilaiyaai niruththineer
Verse 5echcharikkai saththaththai thallivitta pothilum
anbin savukkadiyaal serththanbaai aathariththeer
Verse 6kaarirul soozhum velai kalangith thavikkaiyil
kaaththu neer ennaith thetri karuththaai aathariththeer
Verse 7piraana naathaa unthanai endru naan kandiduven
aaruyir nesaa ummai endrum kaana aasai ponguthe
Verse 8aazhaippin saththam ketka naatkal athikamaamo
nesar maarbil saainthida vaanjai perugiduthe
Verse 9aakaaya mekandhanil serththidum neramithil
aanantham aananthame endrendrum aananthame
Download Song