Verse 1ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து
விவாகத்துக்கு நேமித்து
ஆசீர்வதித்த ஆண்டவர்
தோத்திரிக்கப்பட்டவர்
Verse 2கர்த்தாவே இங்கே உம்மண்டை
நிற்கும் இம்மண மக்களைக்
கண்ணோக்கி அவர்களுக்கும்
மெய்ப் பாக்கியத்தை அருளும்.
Verse 3இருவரும் சிநேகமாய்
இணைக்கப்பட்டுப் பக்கியாய்
உம்மில் நிலைத்து வாழவே
துணை புரியும் கர்த்தரே.
Verse 4ஓர் சமயம் நீர் சிலுவை
அனுப்பினாலும் கிருபை
புரிந்தவர்கள் நன்மைக்கே
பலிக்கப் பண்ணும் நேசரே.
Verse 5ஒன்றாய்ச் சேர்ந்தும்மை நம்புவோம்.
மன்றாடிப் போற்றித் தொழுவோம்
கர்த்தாவே இன்றும் என்றைக்கும்
அடியாரை விடாதேயும்.