Aanandhamaai name aarparipom
Song: Aanandhamaai name aarparipom
Verse 1ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்
Verse 2ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெருவெள்ளமே – அல்லேலூயா
Verse 3கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எம்மைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்
Verse 4படகிலே படுத்து உற்ங்கினாலும்
கடும்புயல் அடித்துக் கவிழ்த்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தியெமை
காத்தாரே அல்லேலூயா
Verse 5யோர்தானை கடந்தோம் அவர் பெலத்தால்
எரிக்கோவைத் தகர்த்தோம் அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுத்தே
என்றென்றுமாய் வாழ்வோம்
Verse 6பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்