Aanatha Geethankal Ennalum paadi
Song: Aanatha Geethankal Ennalum paadi
Verse 1ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் ஏசுவை வாழ்த்திடுவோம்
Verse 2புதுமைப்பாலன் திருமனுவேலன்
வறுமைக் கோலம் எடுத்தவதரித்தார்
முன்னரைப் படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே
Verse 3மகிமை தேவன் மகத்துவ ராஜன்
அடிமை ரூபம தரித்திரக் கோலம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே
Verse 4மனதின் பாரம்யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விசுவாசமும் அளித்தாரே
Verse 5அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே
Verse 6கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம்