Aanathamaka Anbarai Paduvom
Song: Aanathamaka Anbarai Paduvom
Verse 1ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசை அவர் என் ஆத்துமாவிற்கே
ஆசிகள் அருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே
Verse 2இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
Verse 3தந்தை தாயும் என் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
தாபரமும் நல் நாதனும் நானென்றார்
Verse 4கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கிய சாவினை நற் சுவிஷேத்தால்
ஜீவ னழியாமை வெளியாக்கினார்
Verse 5அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின் மேல் ஜெயம் அடைந்திடுவோம்