Aanathamey Paramanadhamey Yesu
Song: Aanathamey Paramanadhamey Yesu
Verse 1ஆனந்தமே பரமானந்தமே இயேசு
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே
Verse 2இந்தப் புவி ஒரு சொந்தமல்லவென்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கே பங்காய்க் கிடைத்திடினும்
Verse 3கர்த்தாவே நீரெந்தன் காருண்யக் கோட்டையே
காரணமின்றி கலங்கேனே யான்
விசுவாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே
Verse 4என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்க்
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெயக் கீதம் பாடி மகிழ்ந்திடலாம்
Verse 5கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ
கைவேலையல்லாத வீடொன்றை மேலே தான்
செய்வேன் எனச்சொல்லிப் போகலையோ
Verse 6துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடினும்
சொல்லி முடியாத ஆறதல் கிருபையைத்
துன்பத்தினூடே அனுப்பிடுவார்
Verse 7இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேன்
என் நேசர் தன்முக ஜோதியதேயல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை