Verse 1ஆண்டவா பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர் மீதில்
ஆசிர்வாதம் ஊற்றிடும்
Verse 2அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்
ஆசையோடு நிற்கிறோமே
ஆசீர்வாதம் ஊற்றுவீர்
Verse 3தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடு கூடினோம்
உந்தன் திவ்ய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்
Verse 4ஆண்டவா! மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்
Verse 5தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே கடாட்சியும்
பெந்தே கோஸ்தின் திவ்ய ஈவை
தந்து ஆசிர்வதியும்