Aandava Prasannamagi Jeevan
Song: Aandava Prasannamagi Jeevan
Verse 1ஆண்டவா பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;
ஆசை காட்டும் தாசர்மீதில்
ஆசீர்வாதம் ஊற்றிடும்
அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்
ஆசையோடு நிற்கிறோமே
ஆசீர்வாதம் ஊற்றுவீர்.
Verse 2தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடே கூடினோம்
உந்தன் திவ்விய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்.
Verse 3ஆண்டவா மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்.
Verse 4தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே! கடாட்சியும்
பெந்தெ கொஸ்தின் திவ்விய ஈவை
தந்து ஆசீர்வதியும்.