Aandavar Padaitha Vetriyin Naal Edhu
Song: Aandavar Padaitha Vetriyin Naal Edhu
Verse 1ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
Verse 2எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்
Verse 3தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
Verse 4எனது ஆற்றலும் எனது பாடலும்
எமது மீட்புமானார்
நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும்
Verse 5தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல் ஆயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன்
Verse 6என்றும் உள்ளது உமது பேரன்பு
என்று பறைசாற்றுவேன்
துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரையா