Verse 1ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பாசந்நிதியில்
நாளெல்லாம் கொண்டாட்டம் நல்லவர் முன்னிலையில்
நன்றிபாடல் தினமும் பாடு (வோம்)
நல்லதேவன் உயர்த்திபாடு (வோம்)
Verse 2கல்வாரிசிலுவையிலேகர்த்தர் இயேசுவெற்றிச்சிறந்தார்
கண்ணீரைமாற்றிநம்மைகாலமெல்லாம் மகிழசெய்தார்
Verse 3கிறிஸ்துவைநம்பினதால் பிதாவுக்குபிள்ளையானோம்
அப்பான்னு கூப்பிடப்பண்ணும் ஆவியாலேநிரப்பப்பட்டோம்
Verse 4உயிர்த்தகிறிஸ்து நம்மஉள்ளத்திலேவந்துவிட்டார்
சாவுக்கேதுவானநம்மசரீரங்களைஉயிர்ப்பிக்கின்றார்
Verse 5ஆவிக்கேற்ற பலி செலுத்தும் ஆசாரிய கூட்டம் நாம்
வெளிச்சமாய் மாற்றியவர் புகழ்ச்சிதனைபாடிடுவோம்
Verse 6துயரம் நீக்கிவிட்டார் கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்
ஒடுங்கினஆவிநீக்கிதுதிஎன்னும் உடையை தந்தார்
Verse 7நீதியின் சால்வைதந்து இரட்சிபபாலேபோர்த்துவிட்டார்
மணமகன் மணமகள் போல் அலங்கரித்துமகிழ்கின்றார்
Verse 8இயேசுவின் பெயராலும் ஆவியாலும் கழுவப்பட்டோம்
நீதிமானாய் மாற்றப்பட்டு தூய்மையானபிள்ளைகளானோம்
Verse 9மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டமாளிகைநாம்
ஆவிதாங்கும் ஆலயமாய் வளர்கின்றகோபுரம் நாம்
Verse 10விண்ணகமேநம் நாடுவருகைக்காககாத்திருப்போம்
அற்பமானநமதுஉடல் அப்பாபோலமாறிடுமே