Verse 1ஆத்துமாக்கள் மேய்ப்பரே
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச்சேரும் நேரமும்
நாசமோசம் இன்றியே
காரும் நல்ல மேய்ப்பரே.
Verse 2பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவோன்;
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்;
வாசல் காவல் ஆன நீர்
மந்தைமுன் நின்றருள்வீர்.
Verse 3கெட்டுப்போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்;
எங்கள் ஐயம் யாவிலும்
கர்த்தரே நடத்திடும்.
Verse 4புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்.
Verse 1aaththumaakkal meyppare
manthaiyai patchikkavum
saaththaan paayum onaai pol
kittichserum neramum
naasamosam indriye
kaarum nalla meyppare
Verse 2panam ondre aasikkum
kooliyaalo oduvon;
kaaval indrik kidakkum
thozhuvaththin vaasal thaan;
vaasal kaaval aana neer
manthaimun nindrarulveer
Verse 3kettuppona yudhaasin
sthaanaththirkuth thevareer
seeshhar seettuppodave
maththiyaa niyamiththeer;
engal aiyam yaavilum
karththare nadaththidum
Verse 4pudhu seeyon nagaril
bakthar varisaiyile
nirkum maththiyaavodum
naangal serach seiyume
kan kulira ummaiyum
kaanum paakkiyam arulum
Download Song