Aathumame En Muzhu Ullame
Verse 1ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
Verse 2போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே
Verse 3தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே
Verse 4தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே
Verse 5வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே
Verse 6உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே
Verse 7துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே
Verse 1aaththumame en muzhu ullame - un
aandavarai thozhuthaeththu - innaal varai
anbu vaith thaadhariththa - un
aandavarai thozhuthaeththu
Verse 2potridum vaanor, boothalaththulloor
saatruthar kariya thanmaiyulla - aaththumame
Verse 3thalai murai thalai murai thaangum vinodha
ulaga mun thondri ozhiyaatha - aaththumame
Verse 4thinam thinam ulagil nee sei balavaana
vinai poruth tharulum, melaana - aaththumame
Verse 5vaadhai, noi, thunbam maatri, aanandha
oadharum thayai sei thuyir thantha - aaththumame
Verse 6utrunak kirangi urimai paaraattum,
mutrum kirubaiyinaal mudi soottum - aaththumame
Verse 7thuthi migunthaerath thoththari thiname,
idhayamae, ullame, en maname - aaththumame
Download Song