Verse 1ஆத்துமாவே தீங்குக்குத்
தப்பத் தக்கதாக
நீ விழித்துத் தொழுது
கெஞ்சிக் கொள்வாயாக;
ஏனென்றால்
சாத்தானால்
உனக்கெந்தத் திக்கும்
சோதனைகள் நிற்கும்.
Verse 2உன்னில் பாவ நித்திரை
முன் தெளிய வேண்டும்;
பாவ நஞ்சின் இனிமை
தேடும் உன்னை மீண்டும்
விலகு
சீர்ப்படு;
சாவுன்னை மெய்யாகச்
சேரும் தூங்காயாக.
Verse 3நீ விழித்தெழுந்திரு
மோசத்தை விட்டோடு
கண் தெளிய அதற்கு
நீ கலிக்கம் போடு;
இவ்விதம்
ஆத்துமம்
கர்த்தரால் தாயையும்
ஒளியும் அடையும்.
Verse 4என்றாலும் பிசாசினி
சோதிக்க ஓயாதே
என்றறிந்து நீ விழி
அசதியாகாதே
ஏனென்றால்
தூங்கினால்
சோதனை பலக்கும்
தண்டனை பிறக்கும்.
Verse 5லோகம் உன்னை மீளவும்
வெல்லத்தக்கதாக
இன்பம் துன்பம் காண்பிக்கும்
நீ விழிப்பாயாக;
ஜாதியார்
இனத்தார்
வீட்டாராலே தானும்
எத்தோர் வேளை காணும்.
Verse 6சுய நெஞ்சுத் த்ரோகியே
தம்பிரானை விட்டு
சோரம் போகச் சாருமே
பைத்தியம் பிடித்து
மெத்தவும்
சீர் கெடும்;
அதற்கெதிராக
நீ விழிப்பாயாக
Verse 7இப்படி விழிக்கையில்
நீ ஜெபமும் பண்ணு;
உன்னைச் சோதனைகளில்
ஆதரித்தன்றன்று
பாரத்தைக்
கண்ணியை
நீக்கிப் போடக் கர்த்தர்
ஒருவர் சமர்த்தர்.
Verse 8வாங்க மனமுண்டானால்
கேட்கத் தேவையுண்டு;
கர்த்தரின் சகாயத்தால்
நாம் நிலைத்திருந்து
போரிலே
வெல்லவே
ஏற்ற எத்தனங்கள்
உக்கிர ஜெபங்கள்.
Verse 9தேவ மைந்தன் நாமத்தில்
கர்த்தரை மெய்யாகத்
தொழுது கொண்டோமாகில்
பூரண அன்பாகச்
சகல
நில்வர
ஈவையும் அளிப்பார்
நித்தமும் ரட்சிப்பார்.
Verse 10ஆகையால் நெருக்கமும்
சாவும் ஞாயத் தீர்ப்பும்
வரும்போ தொத்தாசையும்
ஆறுதலும் மீட்பும்
காணவே
நித்தமே
வேண்டிக்கொள்வாராக
நாம் விழிப்போமாக.