Aayiram Aayiram Paatalkal
Song: Aayiram Aayiram Paatalkal
Verse 1ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே!
யாவரும் தேன் மொழிப் பாடல்களால் இயேசுவைப் பாடிடவாருங்களே!
Verse 2அல்லேலூயா! அல்லேலூயா! என்றெல்லாரும் பாடிடுவோம்!
அல்லலில்லை! அல்லலில்லை! ஆனந்தமாய் பாடிடுவோம்!
Verse 3புதிய புதிய பாடல்களை புனைந்தே பண்களும் சேருங்களே!
துதிகள் நிறையும் கானங்களால் தொழுதே இறைவனைக் காணுங்களே!
Verse 4நெஞ்சின் நாவின் நாதங்களே நன்றி கூறும் கீதங்களாம்!
மிஞ்சும் ஓசைத் தாளங்களால் மேலும் பரவசம் நாடுங்களே!
Verse 5எந்த நாளும் காலங்களும் இறைவனைப் போற்றும் நேரங்களே!
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய் சீயோனில் கீதம் பாடுங்களே