Aayiram sthothirame yesuve
Song: Aayiram sthothirame yesuve
Verse 1ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத்தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா
Verse 2வாலிப நாட்களிலே என்னைப்
படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே
Verse 3உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்
Verse 4சிற்றின்ப கவர்ச்சிகளை வெறுக்கும்
ஓர் இதயம் தந்தீர் துன்பத்தின்
மிகுதியால் தோல்விகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்
Verse 5பலவித சோதனையே சந்தோஷமாய்
நினைப்பேன் எண்ணங்கள்
சிறையாக்கி இயேசுவுக்கு கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்
Verse 6இயேசுவின் நாமத்திலே ஜெயம்
கொடுக்கும் தேவனுக்கு அல்லேலூயா
ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ