Verse 1அபிஷேகம் பெற்ற சீஷர்
தெய்வ வாக்கைக் கூறினார்
கட்டளை கொடுத்த மீட்பர்
“கூட இருப்பேன்” என்றார்.
Verse 2இயேசுவே நீர் சொன்ன வண்ணம்
ஏழை அடியாருக்கே
ஊக்கம் தந்து நல்ல எண்ணம்
சித்தியாகச் செய்வீரே.
Verse 3முத்திரிக்கப்பட்ட யாரும்
ஆவியால் நிறைந்தோராய்
வாக்கைக் கூற வரம் தாரும்
அனல்மூட்டும் தயவாய்.
Verse 4வாக்குத்தத்தம் நிறைவேற
சர்வ தேசத்தார்களும்
உந்தன் பாதம் வந்து சேர
அநுக்கிரகம் செய்திடும்.
Verse 5பிதா சுதன் தூய ஆவி
என்னும் தேவரீருக்கே
தோத்திரம் புகழ்ச்சி கீர்த்தி
விண் மண்ணில் உண்டாகுமே.