Adaikalamey umathadimai naaney
Song: Adaikalamey umathadimai naaney
Verse 1அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
Verse 2அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
Verse 3கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே
Verse 4என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவரே -நடக்கும் வழிதனை
காட்டுபவரே நம்பி வந்தோனை
கிருபை சூழ்ந்து கொள்ளுதே
Verse 5கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே
Verse 6பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை
திரும்ப தந்தீரே – உற்சாக
ஆவி என்னை தாங்கச் செய்தீரே