Verse 1அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
Verse 2கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
Verse 3பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே
Verse 4நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
Verse 5நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
Verse 6மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
Verse 7விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே