அடியார் வேண்டல் கேளும் இயேசுவே!
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;
நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.
Verse 2
எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்
எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.
Verse 3
பாலனாய் வந்த இயேசு ரட்சகா
எம் பாலர் முகம் பாரும் நாயகா;
தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.
Verse 4
வாலிபர் நெறி தவறாமலும்
ஈனர் இழிஞரைச் சேராமலும்
ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.
5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும் உம் பலம் ஆறுதல் தாரும்;
நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.
Verse 5
எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்
அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும்.
Verse 6
ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர
ஆவியில் அன்பில் என்றும் பெருக
எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.
Verse 1
Adiyaar vendal kelum yesuve!
Um paadham serndhom thaasar innaale;
Nal veettaik katta neere varuveer
Um aasi thedi vandhom naangale.