Agora Kaatradithe Aa Seesar
Song: Agora Kaatradithe Aa Seesar
Verse 1அகோர காற்றடித்ததே
ஆ சீஷர் தத்தளித்ததே
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்
Verse 2மடிந்தோம் எம்மை ரட்சிப்பீர்
எழும்பும் என்க தேவரீர்
காற்றை அதட்டிப் பேசினீர்
அமரு
Verse 3அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் சிசிபோலே
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்
Verse 4துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு