Verse 1ஐயையா, நான் வந்தேன் - தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்
Verse 2துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் - தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா
Verse 3உள்ளக் கறைகளில் ஒன்றேனம் தானாய்
ஒழிந்தால் வருவேன், என்று நில்லேன்
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா
Verse 4எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
எத்தனை, எத்தனையோ! இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா
Verse 5ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் - மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தம் வாக்குத் தத்தங்களால்
தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா
Verse 6மட்டற்ற உம் அன்பினால் தடை எதும்
மாறி அகன்றதுவே - இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா
Verse 1aiyaiyaa, naan vandhen - dheva
aattukkutti, vandhen
Verse 2thuyyan neer sori paavi enakkaaych chinthith
thushdan enai azhaiththeer - dhayai
seivoam endre idhai allaadhu pokkillai
dhevaattukkutti, vandhen --- aiyaiyaa
Verse 3ullak karaigalil ondrenam thaanaai
ozhindhaal varuven, endru nilleen
thell um udhiram karai yaavum theerththidum
dhevaattukkutti, vandhen --- aiyaiyaa
Verse 4ennam, veliye poaraattangal, utpayam
eththanai, eththanaiyoa! ivai
thinnnam agatri eliyanai ratchiyum
dhevaattukkutti, vandhen --- aiyaiyaa
Verse 5etrukkondu mannipp peendhu shuththikarith
thennai aravanaiyum - manam
thettrikkondeen undham vaakkuth thathangalaal
dhevaattukkutti, vandhen --- aiyaiyaa
Verse 6mattatra um anbinaal thadai edhum
maari agandradhuve - ini
thittame undham udaimai yaan endrendrum
dhevaattukkutti, vandhen --- aiyaiyaa
Download Song