Alagai Nirkum Yaar Ivargal
Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 அழகாய் நிற்கும் யார் இவர்கள்
பல்லவி
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
Verse 2 ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர் --- அழகாய்
Verse 3 காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் --- அழகாய்
Verse 4 தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் --- அழகாய்
Verse 5 எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் --- அழகாய்
Verse 6 வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று --- அழகாய்
Verse 7 இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை --- அழகாய்
Verse 8 ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே --- அழகாய்
Verse 1 azhagaai nirkum yaar ivargal
Pallavi
azhagaai nirkum yaar ivargal?
thiralaai nirkum yaar ivargal?
senaith thalaivaraam yesuvin potralaththil
azhagaai nirkum yaar ivargal?
Verse 2 oru thaalantho irandu thaalantho
ainthu thaalantho ubayogiththor
sirithaanatho perithaanatho
petra pani seithu mudiththor --- azhagaai
Verse 3 kaadu maedu kadanthu senru
karththar anbai pagirnthavargal
uyarvinilum thaazhvinilum
ookkamaaga jebiththavargal --- azhagaai
Verse 4 thanimaiyilum varumaiyilum
laasaru ponru nindravargal
yaasiththaalum poshiththaalum
visuvaasaththaik kaaththavargal --- azhagaai
Verse 5 ellaa jaathiyaar ellaak koththiram
ellaa mozhiyum pesum makkalaam
siluvaiyin keezh yesu iraththaththaal
seer poraattam seithu mudiththor --- azhagaai
Verse 6 vellai angiyaith thariththukkondu
vellaik kuruththaam olai pidiththu
aarpparippaar singgaasanam munbu
aattukkuttikke magimaiyendru --- azhagaai
Verse 7 ini ivargal pasi adaiyaar
ini ivargal thaagamadaiyaar
veyilaagilum analaagilum
vedhanaiyai alippathillai --- azhagaai
Verse 8 aattukkuttikku thaan ivar kanneerai
ara agatrith thudaiththiduvaar
azhaiththuch selvaar inba oottrukke
alli paruga yesu thaame --- azhagaai
Share
Download Song
Cancel
Download