Alakai nirkum yar evarkal
Song: Alakai nirkum yar evarkal
Verse 1அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத்தலைவராம் இயேசுவின்பொற்தளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
Verse 2தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள்;
Verse 3இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை
Verse 4ஒன்றே ஒன்று என் வாஞ்சையாம்
அழகாய் நிற்போர் வரிசையில் நான்
ஓர் நாளினில் நின்றிடவும்
இயேசு தேவா அருள்புரியும