Verse 1அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன் ;
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன் ;
இங்கே தெய்வ சமுகம்
மெய் வெளிச்சம் பாக்கியம்
Verse 2கர்த்தரே உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்
நீர் இறங்கும்போதானந்த
இன்பத்தால் மகிழுவேன்
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.
Verse 3பயத்தில் உம்மண்டை சேர
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.
Verse 4நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே ;
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர் .
Verse 5விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும்
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்
மெய் வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே .
Verse 6சொல்லும் கர்த்தரே நான் கேட்பேன்
நீர் இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல் தியானத்துடனே ;
தாரும் ஜீவ பானத்தை
தீரும் பசிதாகத்தை