Alleluah Alleluah Ippo Por
Song: Alleluah Alleluah Ippo Por
Verse 1அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே
அல்லேலூயா!
Verse 2கொடூர சாவை மேற்கொண்டார்
பாதாள சேனையை வென்றார்
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்
அல்லேலூயா!
Verse 3இந்நாள் எழுந்த வேந்தரே
என்றைக்கும் அரசாள்வீரே!
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!
Verse 4எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த் திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்
அல்லேலூயா!