Verse 1அல்லேலூயா துதி மகிமை
என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் -2
Verse 2சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஓடியே வருவாயா
Verse 3மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன்
இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும்
Verse 4ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு
Verse 5சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே
Verse 6கண்ணீர் துடைத்திடுவார்
கவலைகள் போக்கிடுவார்
கரங்களை நீட்டியே கருணையோடு
கர்த்தரே காத்திடுவார்