அல்பா ஒமேகா ஆதியும் நீரே
நேசர் சத்தம் கேட்டேன்
அவரை இன்று பணிவேன்
அவர் சமூகம் எனக்கு பேரின்பம் (3)
Verse 2
இயேசு நிற்கிறார் அமர்ந்த கடலிலே
அழைத்துச் செல்கிறார் அமைதி வாழ்விலே
லீபனோன் சிகரத்தில் ஓங்கி நிற்கும்விருட்சம் போல்
கிருபை நிறைந்த இடத்தில் நான் செழித்து வளருவேன்
Verse 3
வாடை எழும்பிடும் தென்றல் வீசிடும்
ஜீவ தண்ணீர் துரவு தோன்றிடும்
லீபனோன் சிகரத்தில் ஓடிவரும் வெள்ளம் போல்
வசனம் நிறைந்த இடத்தில் நான்கனிகள் பெற்றிடுவேன்
Verse 4
நிழல் சாய்ந்திடும் பகல் குளிர்ந்திடும்
வெள்ளைப் போள வாசனை வந்து நிறைந்திடும்
லீபனோன் சிகரத்தில் சீறிவரும் சிங்கம்போல்
வீரம் நிறைந்த இடத்தில் வளருவேன்
Verse 5
லீலி புஷ்பமே கிச்சிலி மரம் இதோ
மதுரமானவர் மகிமை தருகிறார்
லீபனோன் சிகரத்தில் வீசிவரும்வாசனை
சாட்சி நிறைந்த இடத்திலே பெருகிப் படர்ந்திடும்