Verse 1ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே - என் ஆற்றலானவரே
Verse 2நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்
Verse 3அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே - என்
Verse 4புதிதாக்கும் பரிசுத்தரே
புதுப்படைப்பாய் மாற்றுமையா
ஊடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்
Verse 5அப்பாவை அறிந்திடணும்
வெளிப்பாடு தாருமையா
மனக்கண்கள் ஒளிபெறணும்
மகிமையின் அச்சாரமே
Verse 6உள்ளான மனிதனை
வல்லமையாய் பலப்;படுத்தும்
அன்பு ஒன்றே ஆணிவேராய்
அடித்தளமாய் அமைந்திடணும்
Verse 7கிறிஸ்துவின் அன்பின் ஆழம்
அகலம் அயரம் உணரணுமே
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
Verse 8சங்கீதம் கீர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே
Verse 9போர் செய்யும் ஆயதமாய்
உம் வசனம் தாருமையா
எல்லாவித ஜெபத்தோடு
ஆவியிலே மன்றாடணும்
Verse 10என் இதய பலகையிலே
எழுதிடும் உம் வார்த்தை
மையாலல்ல உம் ஆவியாலே
எழுதிடுமே ஏங்குகின்றேன்
Verse 11அரண்களை தகர்த்தெறியும் - என்
அன்பின் வல்லவரே
எதிரான எண்ணங்களை
கீழ்படுத்தும் சிறைபடுத்தும்