Anaithaiyum Seithu Mudikum
Song: Anaithaiyum Seithu Mudikum
Verse 1அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா
Verse 2நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்ற முடியும் எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள
நாளெல்லாம்
Verse 3நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய்
எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்
Verse 4என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக்
காத்துக்கொண்டேன்
Verse 5நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே -
என்னை அடித்தாலும் அணைக்கின்ற
அன்பரே
Verse 6என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள்தானே அந்நாளில் காணுமே
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா