Verse 1ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன்
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகின்றேன்
தினமும் துதிக்கின்றேன்
Verse 2மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்
என் உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்
Verse 3தேவனே நீர் என் தேவன்
தேடுவேன் ஆர்வமுடன்
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன்
வல்லமை காண்கின்றேன்
Verse 4நீர்தானே என் துணையானீர்
உம் நிழலில் களிகூறுவேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா
வலக்கரம் தாங்குதையா
Verse 5கைகளை நான் உயர்த்துவேன்
திருநாமம் சொல்லி சொல்லி-என்
படுக்கையிலும் நினைக்கின்றேன்
இரவினிலும் தியானிக்கின்றேன்
Verse 6இரவினிலும் துதிக்கின்றேன்
படுக்கையிலும் நினைக்கின்றேன்