Verse 1ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ…
Verse 2மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு
Verse 3ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும்
Verse 4விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம்
Verse 5யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார்
Verse 6ஆறாத காயங்கள் ஆறும்
ரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் தரிப்போம்
அனாதி தேவன் அடைக்கலம் பாரில்
அனாதையாவதே இல்லை – ஆ..ஆ..
Verse 7பார் போற்றும் தேவன் நம் தேவன்
பாரினில் வேறில்லை பாக்கியம்
நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே
வேறென்ன வாழ்வினில் வேண்டும்
பிள்ளைகளும் சபையும் பிதாமுன்னே
நிலைக்கும் பரிசுத்தர் மாளிகை எழும்பும்