Anbil Yennai Parisuthanakka ummaikku
Song: Anbil Yennai Parisuthanakka ummaikku
Verse 1அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
Verse 2என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
Verse 3மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
Verse 4முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர - என்
Verse 5வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே - என்
Verse 6நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் எப்படிப் பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே - என்