Verse 1அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்
Verse 2கல்வாரியின் மேட்டினில் கலங்கும்
கர்த்தர் உண்டல்லோ
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார்
Verse 3மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள்
Verse 4வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே – மன்னன் இயேசு பார்
Verse 5வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதே
மரணம் வென்ற இயேசு பார்