Anbu Nesarey Athikalaiyil Umm thirumugam
Verse 1Anbu Nesarey (Athikalaiyil) Ummthirumugam Theydi
Arpanitheyen Ennaiyey
Aradhanai Thuthi Sthothirangal
Appaney Umakku thantheyen - Anbu Nesarey
Aradhanai Aradhanai (2)
Anbar Yesu Rajanukey
Aveeyana Devanukey
Verse 2Intha Nalin Ovvaru Nimidamum
Unthan Ninaival Niramba Vendum (2)
Enn Vayin Varthai Ellam
Pirar Kayam Atra Veyndum (2) - Aradhanai
Verse 3Unthan Yekkam Virupam Ellam
Enn Idhaya Thudipaga Matrum (2)
Enn Jeeva Natkal Ellam
Jeba Veeran Endru Eluthum (2) - Aradhanai
Verse 4Suviseysha Baram Ondrey
Enn Sumaiyaga Marae Veyndum (2)
Enn Theysa Ellaiengum
Umm Namam Solla Veyndum (2) - Aradhanai
Verse 5Umakuugantha Thooya Baliyai
Intha Udalai Oopu Kodutheyen (2)
Atkondu Ennai Nadathum
Abisheygathaley Nirapum (2) - Aradhanai
Verse 1அன்பு நேசரே (அதிகாலையில்) உம்திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்கு தந்தேன் - அன்பு நேசரே
ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே
Verse 2இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் (2)
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும் (2) -ஆராதனை
Verse 3உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும் (2)
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும் (2) - ஆராதனை
Verse 4சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும் (2)
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும் (2) - ஆராதனை
Verse 5உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் (2)
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும் (2) - ஆராதனை