Verse 1ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
Verse 2ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்
Verse 3மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள்
ராஜாதி ராஜா...
Verse 4எக்காள தொனி முழங்க இப்போது துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை துதியுங்கள்
ராஜாதி ராஜா...
Verse 5துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள்
ராஜாதி ராஜா...
Verse 6ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே இயேசுவை துதியுங்கள்
ராஜாதி ராஜா...
Verse 7நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும் என்றென்றும் நம்பத்தக்கவர்
ராஜாதி ராஜா...
Verse 8இயேசுவே நம் இரட்சகர்என்று முழங்கிடுங்கள்
அவர் நமக்காய் ஜீவன் தந்தார் அவரின் ஆடுகள் நாம்
ராஜாதி ராஜா...
Verse 9நடனத்தோடும் தம்புரோடும் நாதனை துதியுங்கள்
மத்தளத்தோடும் குழல் ஊதி சப்தமாய் துதியுங்கள்
ராஜாதி ராஜா...