Verse 1ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
Verse 2என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துக்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம்
Verse 3ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
Verse 4அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல
Verse 5ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
Verse 6கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
Verse 7சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோருக்கு குறையேயில்லை
Verse 8கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
அவர் செவிகள் அவனுக்குத் திறந்திருக்கும்
Verse 9நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்
துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்
Verse 10உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கிறார்
நைந்த நெஞ்சத்தாரை காப்பாற்றுகிறார்
Verse 11நீதிமானுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும் - அவை
அனைத்தினின்றும் அவர்தாமே விடுதலை தருவார்
Verse 12ஆண்டவரில் என் ஆன்மா மேன்மைபாராட்டும்
சிறுமையுற்றோர் அதைக்கேட்டு அக்களிப்பார்கள்