Andha Naal Inba Inba Inba Naal
Song: Andha Naal Inba Inba Inba Naal
Verse 1அ(இ)ந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
எங்கள் இயேசு ராஜன்
வானில் தோன்றும் நாள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Verse 2இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே
வேகமாய் வேகமாய் வேகமாய்
Verse 3கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே
பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே
வாதை நோய் துன்பமும் வருத்தங்கள்
யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே
Verse 4ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார்
பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்
ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம்
அவரையே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
Verse 5புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே
நித்ய காலம் நாமுமங்கே வாழ்வோமென்றுமே
தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே
என்றுமே என்றுமே என்றென்றுமே
Verse 6பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே
பாலகர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே
பாலுடன் தேனுமாய் பழரசம் பாங்குடன்
பருகுவோம் பருகுவோம் பருகுவோம்