LyricFront

Aruvadai miguthi

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அறுவடை மிகுதி ஆலோ இல்லை அன்பரின் கதறல் கேட்டிடுதே
Verse 2
நானிலம் முழுவதும் நாநூறு கோடி நாசத்தின் வழியை நாடிடுதே இயேசுவின் அன்பு நன்மையையும்நெருக்க எழும்பிடுவோம் நாம் வாலிபரே
Verse 3
அமைதி இல்லை நம்பிக்கை இல்லை அழுகையும் கண்ணீர் வாழ்க்கையிலே உறக்கமும் முழு உணவில்லை உணர்ந்திடுவீர் இதை வாலிபரே
Verse 4
மிருகம் போல் உழைத்தும் வறுமையின் தொல்லை வாதையில் வாட்டிடும் கூட்டத்தைப்பார் ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை அன்பு காட்டவும் யாருமில்லை
Verse 5
நம்பிக்கையற்ற கல்லறை நாடி நாளினில் இலட்சங்கள் செல்கிறதே திறப்பினில் நிற்க ஆள் இல்லை என்று திகைத்துக் கதறிடும் இயேசுவைப் பார்
Verse 6
அலறிடும் பிள்ளைகளின் குரலினைக்கேட்டும் அழுவதின்றி வேறென்ன செய்வார் யாரை அனுப்புவேன் யார் போவான்என்றார் கதறலை என் உள்ளம் கேட்டிடாதோ
Verse 7
அன்பரே வந்தேன் அழுகையைக் கண்டேன் அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையிலே பாரினில் கழுதையாய் சுமந்தும்மை சென்று பாதத்தில் விடுவேன் ஜீவனையே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?