அதன்பின்பு எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக ’தாகமாயிருக்கிறேன்’ என்றார். யோவான் 19:28
அருவிகள் ஆயிரமாய்
பாய்ந்து இலங்கிடச் செய்வார்
அனைத்தும் ஆள்வோர் ‘தாகமாய்
இருக்கிறேன்’ என்றார்.
Verse 2
வெம்போரில் சாவோர் வேதனை
வியாதியஸ்தர் காய்ச்சலும்
குருசில் கூறும் இவ்வொரே
ஓலத்தில் அடங்கும்.
Verse 3
அகோரமான நோவிலும்
மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம்முக்கியம்;
என் ஆன்மாவும் ஒன்றே.
Verse 4
அந்நா வறட்சி தாகமும்
என்னால் உற்றீர் பேர் அன்பரே;
என் ஆன்மா உம்மை முற்றிலும்
வாஞ்சிக்கச் செய்யுமே.