LyricFront

Deva Samadhanam Kirubaiye

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தேவ சமாதானம் கிருபையே தேவ சந்தோஷமும் நி;;;;றைவாயே தேவாசீர்வாதங்கள் தங்கிடவே தேவன் அருள்
Verse 2
ஆணி கடாவின கரமதே அன்புடன் உன்னை அணைக்கிறதே வல்லமை உன்மீதில் பாய்ந்திடவே கர்த்தர் வலக்கை நீட்டுகின்றார் - தேவ
Verse 3
இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே இன்றைக்கும் உன் ஏசு மாறிடாரே கலங்காதே திகையாதே என் உள்ளமே கர்த்தர் துணை நிற்கிறார் - தேவ
Verse 4
தேவ சித்தம் என்றும் செய்திடுவாய் தேவ குமாரன் உன்னோடிருப்பார் உன் மேல் தன் கண் வைத்து ஆலோசனை தந்து உன்னை நடத்திடுவார் - தேவ
Verse 5
கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே ஊழியம் செய்குவாயே - தேவ
Verse 6
நல்ல தீர்க்காயுள் பெருகிடவே நித்திய ஜீவனும் பெற்றிடவே பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே பரன் தயை புரிவார் - தேவ
Verse 7
வாழ் நாளெல்லாம் களிகூர்ந்திடவே வாடாத கிருபை கிருபை கிருபை என்றென்றுமுள்ளதே கர்த்தனை வாழ்த்திடுவோம் - தேவ

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?