LyricFront

Deva Sitham Niraivera Ennaiyum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே
Verse 2
முட்களுக்குள் மலர்கின்றதோர் மக்களை கவரும் லீலி புஷ்பம் போல் என்னையுமே தம் சாயலாய் என்றென்றும் உருவாக்குவார்
Verse 3
பொன்னைப் போல புடமிட்டாலும் பொன்னாக விளங்குவேனென்றென்றுமே திராணிக்கு மேல் சோதித்திடார் தாங்கிட பெலனளிப்பார்
Verse 4
அத்தி மரம் துளிர்விடாமல் ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும் கர்த்தருக்குள் சந்தோஷமாய் நித்தமும் மகிழ்ந்திடுவேன்
Verse 5
நீதிமானை அனுதினமும் சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும் கர்;த்தர் அன்பை விட்டு நீங்கா சுத்தனாய் நிலைத்திருப்பேன்
Verse 6
முன்னறிந்து அழைத்தவரே முன்னின்று நலமுடன் நடத்துவார் சகலமும் நன்மைக் கென்றே சாட்சியாய் முடித்திடுவார்
Verse 7
சோதனையை சகிப்பவனே சாந்தமும் பொறுமையு முள்ளவனே ஜீவக்கிரீடம் பெற்றிடுவான் ஜோதியாய் பிரகாசிப்பான்
Verse 8
கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள் கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள் இரட்டிப்பான பங்கைப் பெற இரட்சகர் அழைத்திடுவார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?