Verse 1என் அருள் நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
ப+லோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்
Verse 2என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்
Verse 3கை, தலை, காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
முள் முடியும் ஒப்பற்றதே
Verse 4சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்
Verse 5மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே