LyricFront

En meetpar uyirodu irukaiyil

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே
Verse 2
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர், என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்; விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர், மித்திரனே சுகபத்திர மருளும்
Verse 3
ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார், அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்; மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்; மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்
Verse 4
கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார், கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்; பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார், பரம பதவியினுள் என்றனை எடுப்பார்.
Verse 5
பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர் சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?