LyricFront

Ennai Kakkum Kedakamey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
என்னைக் காக்கும் கேடகமே தலையை நிமிரச் செய்பவரே - (2) இன்று உமக்கு ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை - (2)
Verse 2
உம்மை நோக்கி நான் கூப்பிடடேன் எனக்கு பதில் நீர் தந்தீரையா - (2) படுத்து உறங்கி விழித்தெழுவேன் நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை…. ஆராதனை…. அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2)
Verse 3
சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் - (2) விடுதலை தரும் தெய்வம் நீரே வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் - (2) ஆராதனை…. ஆராதனை…. அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2)
Verse 4
பக்தி உள்ள அடியார்களை உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் - (2) வேண்டும் போது செவி சாய்க்கின்றீர் என்பதை நான் அறிந்து கொண்டேன் - (2) ஆராதனை…. ஆராதனை…. அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2)
Verse 5
உலகப் பொருள் தரும் மகிழ்வைவிட மேலான மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் - (2) நீர் ஒருவரே பாதுகாத்து சுகமாய் வாழச் செய்கின்றீர் - (2) ஆராதனை…. ஆராதனை…. அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2)

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?